சட்டமன்ற விவாதத்தின்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை ஆற்றுவதற்கு அரசின் சார்பாக வாகனங்கள் வழங்குகின்ற போது அதற்கு ஒரு தனி மரியாதை இருக்கிறது. நீங்கள் எத்தனைக் கோடியில் கார் ஓட்டினாலும் அரசு கொடுக்கின்ற காரில் போகும்போது தனி மரியாதை இருக்கிறது. கார் ரேஸிற்கே நீங்கள் 24 கோடி ரூபாய் செலவு செய்தீர்கள். அதெல்லாம் யார் காசு. அதற்கெல்லாம் 24 கோடி செலவு செய்த நீங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் வாகனம் வாங்கி தருவதைப் பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? என்பதுதான் என்னுடைய கேள்வி" என்று கேட்டிருக்கிறார். செங்கோட்டையன் அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "எங்கள் திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த முடிவு. யாருக்கெல்லாம் கார் தேவையோ அவர்களுக்கெல்லாம் கார் வாங்கிக்கொடுங்கள். திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவையில்லை என்று நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம். நீங்கள் (தவெகவினர்) யாரும் கார் வாங்கிக் கொள்ளக்கூடாது என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை. கார் வாங்கிக்கொள்ளுங்கள் எல்லாத் தொகுதியும் சுற்றிக்கொள்ளுங்கள். "பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற"- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி கார் ரேஸ் பற்றி இங்கு ஒரு விவாதம் வருகிறது. எங்கள் ஆட்சியில் நடத்தப்பட்டது இன்டர்நேஷனல் கார் ரேஸ். ஆசியாவிலேயே முதன் முதலாக நகரத்திற்குள் இரவு நேரத்தில் நடத்திக்காட்டுவோம் என்று நடத்திக்காட்டினோம். இதைத் தடுப்பதற்கு அப்போது வழக்குத் தொடர்ந்தார்கள். ஆனால் இன்டர்நேஷனல் அளவில் நடக்கக்கூடிய கார் ரேஸை நீங்கள் தடுத்து நிறுத்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. உதயநிதி ஸ்டாலின் வெற்றிகரமாக எங்கள் ஆட்சியில் அந்த கார் ரேஸை நடத்திக்காட்டினோம். கார் ரேஸை நீங்கள் கொச்சைப்படுத்துவதன் மூலம் நீங்கள் எங்களைக் கொச்சைப்படுத்தவில்லை. கார் ரேஸ் வீரர்களை நீங்கள் கொச்சைப்படுத்துகிறீர்கள்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/sengottaiyan-vs-udhayanidhi-stalin-speech-in-tn-assembly




