சென்னை, 2 தொகுதி இடைத் தேர்தலில் த.வெ.க.தான் அதிக பணம் கொடுப்ப தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். 3 கட்சிகளும் பணப்பட்டுவாடாவை ஒரு கலாச்சார மாக வைத்துள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அக்டோ பர் 6-ஆம்தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. அதாவது தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகள், நாதக ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இந்த கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். வாக்காளர்களுக்கு த.வெ.க., தி.மு.க., அ. தி.மு.க.ஆகியாகட்சிகளும் பணம் கொடுத்து வருவதாக 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி இன்று இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது:- "மதுராந்தகத்தில் தவெகவினர்தான் ஒட்டுக்கு அதிக பணம் கொடுக்கின்றனர். நாங்கள் அங்கு பிரசாரத்துக்கு சென்றபோது நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டோம். அப்போது 'எல்லோரும், பணம் கொடுக்கிறார்கள் நீங்கள் கொடுக்கவில்லையே. 'என்று சில கிராமமக்கள் என்னிடம் கேட்டார்கள். எந்தெந்த கட்சி எல்லாம் பணம் கொடுத்தார்கள் என்று கேட்டபோது, தவெகவினர்தான் ஒட்டுக்கு அதிக பணம் கொடுத்ததாகச் சொன்னார்கள். தூயசக்தி, நாங்கள் ஓட்டுக்கு எல்லாம் பணம் கொடுக்க மாட்டோம் என்று தான் கடந்த தேர்தலிலும் முதல் அமைச்சர் விஜய் பிரசாரம் செய்தார். இப்போதும் அப்படியே பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் மதுராந் தகத்தில் பொதுமக்கள் கொடுத்திருக்கும் வாக்குமூலம் இது. 'தவெக அதிக பணம் கொடுத்திருக்கிறார்கள், நீங்கள் கொஞ்சமாவது கொடுங்கள்' என்று மக்கள் எங்களிடம் பேரம் பேசும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எங்கள் கட்சியின் பலம், கொள்கைகள் குறித்து எடுத்துரைத்து நாங்கள் எந்த சூழலிலும் பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறினோம். இது குறித்து சம்மந்தப்பட்ட தலைவர்கள் பதிலளிக்க வேண்டும். நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் வாக்குரிமையை பறித்திருக்கிறது. பணப்பட் டுவாடா குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கூறினார். இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியதாவது:- மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 3 கட்சிகளும் பணம் கொடுக்கின்றனர். இதை 3 கட்சியினருமே ஒரு கலாச்சாரமாக வைத்துள்ளார்கள். வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கணக்கெடுக்கிறார்கள். இந்த தேர்தலில் மற்ற கட்சிகள் யாரும் மக்களைச் சந்திக்கவில்லை. மற்ற கட்சிகளிடம் அரசியல் இல்லை. வெறுமனே தலைவர்கள் வந்துபேசிவிட்டுச்செல்கின்றனர். நாங்கள் மக்களைச் சந்திக்கிறோம். தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேச வேண்டும், கண்டனம் தெரிவிக்கவேண்டும். அவர் இது பற்றிகண்டிப்பாக பேச வேண்டும். வாக்குரிமை, போராடி பெற்ற உரிமை. முதல்-அமைச்சர் விஜய் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/2nd-constituency-by-election-too-much-money-is-being-paid-for-votes-marxist-alleges




