கார்டிப், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று 2-வது போட்டியில் களம் இறங்குகிறது. இந்தியா முன்னிலை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காமில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி கடந்த போட்டியில் கேப்டன் சுப்மன் கில் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் பாதியில் வெளியேறினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவது சந்தேகம் தான். ஒருவேளை அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அணியை வழிநடத்துவார். மூத்த வீரர்கள் ரோகித் சர்மா (11 ரன்), விராட் கோலி (5 ரன்) சோபிக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர்கள் அசத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மற்றபடி அதே உத்வேகத்துடன் தொடரை வசப்படுத்த நமது வீரர்கள் ஆவலுடன் உள்ளனர். இங்கிலாந்து அணி இங்கிலாந்து அணியில் முதல் ஆட்டத்தில் ஜோ ரூட், லியாம் டாசன் அரைசதம் அடித்தனர். கேப்டன் ஹாரி புரூக் (1 ரன்), ஜோஸ் பட்லர் (5 ரன்), ஜேக்கப் பெத்தேல் (14 ரன்) உள்ளிட்டோர் வேகப்பந்து வீச்சில் அடங்கினர். அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க வரிந்து கட்டுவார்கள் என்பதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கார்டிப் மைதானத்தில் இங்கிலாந்து 17 ஆட்டங்களில் விளையாடி அதில் 10-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. 3 ஆட்டத்தில் முடிவில்லை. இந்தியா இங்கு 4 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றி பெற்றிருக்கிறது. விராட் கோலி இங்கு சதம் அடித்துள்ளார். இந்த மைதானத்தில் 13 முறை 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக இங்கிலாந்து 386 ரன்கள் குவித்தது அதிகபட்சமாகும். ஆடுகளத்தன்மையை பார்க்கும் போது, ரசிகர்கள் ரன் மழையை எதிர்பார்க்கலாம். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:- இந்தியா: ரோகித்சர்மா, சுப்மன் கில் (கேப்டன்) அல்லது இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே, குர்னூர் பிரார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா. இங்கிலாந்து: பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ஜோஷ் டாங்கு. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/will-india-clinch-the-odi-series-against-england-second-match-today




