ஹராரே, வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இதையடுத்து நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஹராரேவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 199 ரன்களுக்கு ஆல் அவுட் இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 48.1 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பொறுப்புடன் ஆடிய அந்த அணியின் வெஸ்லி அதிகபட்சமாக 75 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய வங்காளதேச அணியின் ஷெரிபுல்லா இஸ்லாம் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கி விளையாடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/zimbabwe-vs-bangladesh-3rd-odi




