சென்னை, மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்க. என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:- குடியிருப்புகள் அகற்றப்பட்டன சென்னை சைதாப்பேட்டை தொகுதி மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவில் நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாடகை செலுத்தி வசித்து வருகிறார்கள். அவர்களில் 20 குடும்பங்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள்,அவர்களின் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டுமென மிரட்டப்பட்டு வந்தார்கள். இந்த நிலையில் 07.09.2026 காலை காவல்துறை அந்த குடியிருப்பு பகுதியில் குவிக்கப்பட்டு,20 குடும்பங்களின் குடியிருப்புகள் அகற்றப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி இந்நிலையில், அரசுக்கு சொந்தமான கோவில் நிலத்தில் வாடகை செலுத்தி நீண்ட காலமாக வசிக்கும் ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை பாதுகாக்க வேண்டும், அம்மக்களின் வசிப்பிட உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக இந்து அறநிலையத்துறை நீதிமன்றத்தில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராடினர். வழக்குகள் பதிவு போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா, மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் அபிஷேக், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ர.சவுமியா, துணை தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்ட 8 பேர் மீது இந்து அறநிலையத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/withdraw-cases-against-communist-party-members-who-fought-for-rights-mu-veerapandian




