"இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச பணம் பத்திரமா இருக்கணும். ஆனா மாசம் பிறந்தா கைச்செலவுக்கு யாரையும் எதிர்பார்க்காம நிலையான வருமானம் வரணும்!" 50 வயதைத் தாண்டிய பெரும்பாலானோரின் மனதில் ஓடும் சிந்தனை இதுதான். வங்கியில் எஃப்.டி (FD) போட்டா வட்டி குறைஞ்சுட்டே போகுது, பணவீக்கம் (Inflation) வேற வயித்துல புளியைக் கரைக்குது. மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் போனா "சந்தை அபாயம்"னு பயமுறுத்துறாங்க. பணத்தைக் கையில வச்சிருந்தா கரைஞ்சு போயிடுமோனு தயக்கம். இதனாலயே எதுவுமே செய்யாம பணத்தைச் சும்மா வச்சிருக்கீங்களா? உங்கள் சேமிப்பை மாதாந்திர வருமானமாக மாற்றும் 3 எளிய வழிமுறைகள் இதோ: Fixed Deposit 1. எஃப்.டி (Fixed Deposit) பாதுகாப்பு. ஆனா அதுவே போதாது! எஃப்.டி பாதுகாப்பானதுதான், ஆனால் அதில் கிடைக்கும் வட்டிக்கு வரி கட்டியது போக, பணவீக்கத்தை அது முறியடிக்காது. தீர்வு: உங்கள் மொத்தத் தொகையில் 30-40% தொகையை மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் (SCSS), RBI பாண்டுகள் மற்றும் நல்ல வங்கி எஃப்.டிகளில் பிரியுங்கள். இது உங்கள் அடிப்படைத் தேவைகளுக்கான நிலையான வட்டியைத் தரும். SWP Pension 2. மியூச்சுவல் ஃபண்டில் 'SWP' (Systematic Withdrawal Plan) "மியூச்சுவல் ஃபண்ட்ல போட்டா பணம் போயிடும்"ங்கிற பயம் வேண்டாம். ரிஸ்க் கம்மியான ஹைபிரிட் (Debt + Equity) ஃபண்டுகளில் முதலீடு செய்து, SWP முறையைப் பயன்படுத்தலாம். தீர்வு: நீங்கள் முதலீடு செய்த தொகையிலிருந்து, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் உங்களுக்குத் தேவையான தொகை உங்கள் வங்கிக் கணக்கிற்குச் சம்பளம் போல வந்து சேரும். இதில் வரிச் சலுகையும் உண்டு. உதாரணமாக ₹ 25 லட்சம் பணத்தை முதலீடு செய்து, மாதாமாதம் SWP முறையில் ₹10000 ரூபாயை மாத வருமானமாகப் பெறலாம். இதற்கு 100% வரி விலக்கு உண்டு! Debt Mutual Funds 3. ஆபத்தில்லாத 'டெப்ட் ஃபண்டுகள்' (Debt Funds) பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இல்லாத, அதே சமயம் எஃப்.டி போன்ற லாபம் தரக்கூடிய கடன் சார்ந்த ஃபண்டுகளில் (Debt Funds) மீதித் தொகையை முதலீடு செய்யலாம். அவசர காலத் தேவைகளுக்கு இதை உடனே பணமாகவும் மாற்றிக்கொள்ள முடியும். பயத்தை உடைக்கும் 3 பொன்விதிகள்: ஒரே இடத்துல வைக்காதீங்க: ரொக்கம், எஃப்.டி, மியூச்சுவல் ஃபண்ட் எனப் பணத்தைப் பிரித்து முதலீடு செய்யுங்கள் (Diversification). பணவீக்கத்தைக் கவனியுங்கள்: இன்றைக்கு ரூ.30,000 மாதச் செலவு என்றால், 10 ஆண்டுகள் கழித்து ரூ.50,000 தேவைப்படும். அதற்கு உங்க பணம் பணவீக்கத்தைத் தாண்டி 6% வளர வேண்டும். தயக்கத்தைத் தவிருங்கள்: பணத்தைச் சும்மா வைத்திருப்பதே மிகப்பெரிய இழப்பு. தைரியமாக முதலீடு செய்து, எதிர்காலத்தினை சிறப்பாக மாற்றிடுங்கள். உங்கள் ஓய்வுக்காலம் என்பது பிறரை எதிர்பார்த்து வாழும் காலம் அல்ல; உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கும் பொற்காலம். இன்றே சரியான திட்டமிடலைத் தொடங்குங்கள்! 50+ வயதினருக்கான சிறப்பு நிதி வழிகாட்டல் உங்களுக்கு 50+ வயதா? நீங்கள் சேர்த்து வைத்துள்ள பணத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களுக்கான பென்ஷன் பெறுவது எப்படி? ₹ 1 கோடி ரூபாய் பணம் சேர்ப்பது எப்படி? அதில் இருந்து மாதாமாதம் ₹25000 - ₹40000 வரை மாதாந்திர பென்ஷனாகப் பெறுவது எப்படி? வரும் புதன் (செப்டம்பர் 16) மாலை 7 மணிக்கு நடைபெறும் சிறப்பு ஆன்லைன் நிதி திட்டமிடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் ஃபிக்செட் டெப்பாசிட்டுகளில் பணம் வைத்திருப்பவர்கள், அதனைப் பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி என்று அறிந்துகொள்ளலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, இங்கே முன்பதிவு செய்யவும்: Personal Finance: 5 ஆண்டுகளுக்கு மேல் யோசிக்கத் தெரியாதவர்களா நாம்? ஷேர் மார்கெட்டும் பொறுமையும் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/personal-finance/how-to-get-monthly-pension-after-50-years-of-age




