புதுடெல்லி, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது. பார் உரிமம் வழங்கியது. மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் வழங்கியது போன்ற முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பா லாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்ப திவு செய்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் என்பவர், டாஸ்மாக் முறைகேடு வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு கடந்த 14-ந்தேதி விசாரித்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "மனுதாரருக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், இந்த வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். இதனிடையே இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வக்கீல் பிருந்தா பண்டாரி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மாலியா பக்க்ஷி, வி.மோகனா அடங்கிய அமர்வு இன்று (திங்கட்கிழமை) விசாரிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/tasmac-irregularities-case-hearing-in-supreme-court-today




