சென்னை, வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சென்னையில் உள்ள முக்கியப் பேருந்து முனையங்கள் மற்றும் பிற நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:- கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 505 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 570 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 14 மற்றும் 15-ந் தேதிகளில் நாள் ஒன்றுக்கு தலா 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வெளி மாவட்டங்கள் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வார விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவைகேற்ப பல்வேறு இடங்களில் இருந்து 465 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/weekend-2120-special-buses-are-operating-across-tamil-nadu-today




