தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கப் போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் வைத்து தொடங்கலாமா என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உசிலம்பட்டியில் பெண்களுக்கு சீர் கொடுக்கும் கலாசாரம் அதிகம் நடக்கும் பகுதி இருக்கிறது. இன்றளவும் பெண் வீட்டார் கடன் வாங்கியாவது தங்கள் மகளுக்கு சீர் செய்ய வேண்டுமென்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள். அதனால் இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் இருந்து துவங்கலாம் என தவெக தலைமை கணக்கு போடுகிறது. ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ மேலும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பெண் சிசு கொலை அதிகம் நடந்த பகுதியாகவும் உசிலம்பட்டி இருந்தது. இந்த திட்டம் முழுவதும் பெண்களை மையப்படுத்தியே தொடங்கபட உள்ளதால், பெண் சிசு கொலை சம்பந்தமாக விழிப்புணர்வாக பேசினால் நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால் உசிலம்பட்டியை டிக் அடித்திருக்கிறது தவெக தலைமை. இதனிடையே இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் எங்கு வைத்து தொடங்கலாம் என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முதல்வர் விஜய் நேரில் கலந்து கொள்ளலாமா? அல்லது வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கலாமா? என்பதையும் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/thaaiamaman-gold-ring-scheme-what-is-the-calculation-behind-the-chief-minister-giving-the-green-signal-to-usilampatti




