கரூர், கரூர் மாநகராட்சிக்கு அதிக சொத்து வரி பாக்கி வைத்துள்ளோர் பட்டியலில், மாவட்ட தி.மு.க. அலுவலகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கரூர் மாநகராட்சியின் பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. இதன் மூலமே மாநகரில் குப்பை அகற்றுதல், தெரு விளக்கு, பூங்கா, சாலை பராமரித்தல், பொது சுகாதாரம், நோய் தடுப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேரின் பட்டியல் இதனால் 1 முதல் 48 வரை உள்ள வார்டுகளில் வரி வசூல் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகளவில் சொத்து வரி நிலுவை செலுத்த வேண்டிய முதல் 100 பேரின் பட்டியலை https:/ என்ற கரூர் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.36.48 லட்சம் வரி பாக்கி வைத்து முதலிடம் அந்த பட்டியலில் 33-வது வார்டு, கரூர் திண்டுக்கல் சாலையில் உள்ள ராமசாமி, நாராயணசாமி ஆகியோர் ரூ.36.48 லட்சம் வரி பாக்கி வைத்து முதலிடத்தில் உள்ளனர். ரூ.28.33 லட்சம் வரி பாக்கி வைத்து இரண்டாம் இடம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 30-வது வார்டு, கவுரிபுரம் விரிவாக்கத்தில் இருக்கும் தி.மு.க. மாவட்ட அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் 2008-ல் திறக்கப்பட்டபோது ஆண்டுக்கு ரூ.1.18 லட்சம் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டது. தற்போது ஆண்டு வரியாக ரூ.2.36 லட்சம் செலுத்த வேண்டும். 2008 முதல் 2026 மார்ச் வரை மொத்தம் ரூ.28.33 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்து, பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-dmk-office-ranks-second-in-the-list-of-highest-tax-arrears




