புதுடெல்லி ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.82-க்கு விற்பனை செய்யலாம் என்பது பற்றி இன்று மாலை 4 மணிக்கு கெஜ்ரிவால் ஊடக சந்திப்பில் விளக்கம் அளிக்கிறார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் இன்று மாலை 4 மணியளவில் ஊடகத்தினரை சந்திக்க உள்ளார். கூடுதல் தொகை அப்போது எரிபொருள் விலை பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்க உள்ளார். அவர், பெட்ரோலுக்காக நுகர்வோரிடம் இருந்து கூடுதல் தொகையை மத்திய அரசு வசூலிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளதுடன், ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.82-க்கு விற்பனை செய்ய முடியும். ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார். இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பின்போது இன்று மாலை 4 மணியளவில் விரிவாக பேசுவேன் என்று கூறியுள்ளார். விலை ஏற்ற இறக்கம் கடந்த 3-ந்தேதி மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, உலகளாவிய அளவிலான கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தின்போது, நுகர்வோரை நிதி இழப்பில் இருந்து பாதுகாக்கும் வகையிலான முக்கிய நடவடிக்கையை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மேற்கொண்டன. இதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றை, எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் குறைவான விலைக்கு விற்பனை செய்தன. இதனால், அவற்றிற்கு ரூ.74,781 கோடி வரை இழப்பு ஏற்பட்டது என கூறினார். விலை குறைவு சமீபத்தில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையானது, சரிவை சந்தித்துள்ளது. இதுபற்றி குறிப்பிட்ட மத்திய மந்திரி பூரி, உலகளவில் கச்சா எண்ணெய் விலை அடுத்த சில வாரங்களுக்கு இதே அளவில் தொடரும் என்றால், ஒவ்வொருவரும் கேட்பது போன்று, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பது என்பது நியாயமுள்ள ஒரு கேள்வியாகவே இருக்கும். ஆனால், இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என கணிக்க முடியாது. அதனால், உடனடியாக விலை குறைவு என்பது பற்றி இப்போதே நான் கூறுவது சரியாக இருக்காது என்றும் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/petrol-can-be-provided-at-rs-82-kejriwal-explains-at-media-conference-at-4-pm




