கோவில்பட்டி, கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேட்டரி கார் சேவை, 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நேற்று முதல் மீண்டும் தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேட்டரி கார் சேவை கோவில்பட்டி ரெயில் நிலையம் வழியாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பயணிகள் ரெயில்களில் பயணித்து வருகின்றனர். கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து குடும்பத்துடன் வெளியூர் செல்லும் பயணிகளும் இந்த ரெயில் நிலையம் வந்து செல்கின்றனர். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் உடல் நலக்குறைவு உள்ள பயணிகளும் ரெயில் நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தூத்துக்குடி-மைசூரு ரெயிலில் பயணிக்கும் நெல்லை பகுதியினரும், நாகர்கோவில், நெல்லை வந்தே பாரத் உள்பட தென் பகுதியில் இருந்து வரும் ரெயில்களுக்காக தூத்துக்குடி பகுதியில் இருந்து ஏராளமான பயணிகளும் கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்து செல்கின்றனர். இந்த பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார் சேவை நடந்து வந்தது. திடீர் நிறுத்தத்தால் அவதி இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை ஏற்றி செல்வதற்கும், பயணிகளை ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு அழைத்து செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த பேட்டரி கார் சேவை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிக உடமைகளுடன் வரும் பயணிகள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்வதற்கும் உடைமைகளை தூக்கி செல்வதற்கும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். ரெயில் பயணிகள் மகிழ்ச்சி எனவே, உடனடியாக கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவையை தொடர வேண்டும் என கடந்த 14-ந்தேதி "தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நேற்று முதல் பேட்டரி கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. பேட்டரி கார் சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் பயணிகள் குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த ரெயில்வே அதிகாரிகளுக்கும் பயணிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/battery-car-service-resumes-at-kovilpatti-railway-station-passengers-happy




