கோவை விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவைக்கு வருவது என்றாலும், தமிழகத்திற்கு வருவதும் என்றாலும் அது ஒரு தனி மகிழ்ச்சி, தனி பூரிப்பு என்பதை மறுக்க இயலாது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், தமிழக மக்களுக்கு எனது அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். விஜய் டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்த கேள்விக்கு, “இது அரசியல் கேள்வி. இதற்கு உரிய பதிலை அரசியல் தலைவர்கள் தருவார்கள்” என பதிலளித்தார். மாணவர்களுக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு, “எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தேசத்தின் ஒற்றுமையை பாதுகாக்க எல்லா மாணவர்களும் முன்வர வேண்டும். தேசம் ஒன்றாக இருந்தால் மட்டும்தான், உலக அரங்கில் நம் குரல் எடுபடும்” என பதிலளித்தார். த.வெ.க அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டில் உள்ள புதிய அரசுக்குக் காலம் தர வேண்டும் என்பதுதான் உங்களுடைய விருப்பமும், என்னுடைய விருப்பமும்கூட” என பதிலளித்தார். ’ராகுல் காந்தி கைது ஜனநாயகத்தின் மீதான கொடூர தாக்குதல்!’ – காங்கிரஸ் கண்டனம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/vice-president-cpradhakrishnan-says-time-should-be-given-to-the-tvk-government




