பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு அரசு பஸ்களில் மட்டுமே சென்று வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். வனப்பகுதியில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சொரிமுத்து அய்யனார் கோவில் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் கருதி பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, 4 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்முறையில் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. 6 நாட்கள் அனுமதி கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி 6 நாட்கள் வரை வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் பொருட்களை எடுத்து செல்ல ஆகஸ்டு 9-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனைச்சாவடியில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆகஸ்டு 7 மற்றும் 8 ஆகிய நாட்கள் முழுவதும் கோவில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் காரணத்தினால் அரசு பஸ், தனியார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் பாபநாசம் சோதனைச்சாவடியில் அனுமதிக்கப்படமாட்டாது. அரசு பஸ்களில் மட்டுமே அனுமதி ஆகஸ்டு 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் மட்டுமே கோவிலுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது. வழக்கமான நடைமுறை ஆகஸ்டு 13-ந் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு ஆகஸ்டு 14-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணிவரையிலும் பாபநாசம் கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும். கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும். ஆகஸ்டு 15, 16-ந் தேதிகளில் தூய்மை பணிகள் மற்றும் கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 17-ந் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி கோவிலுக்கு சென்று வரலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasya-restrictions-on-devotees-to-visit-karaiyaru-sorimuthu-ayyanar-temple




