கொல்கத்தா, மேற்குவங்காள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. 4 பேர் பலி இந்நிலையில், மழையில் போது பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியது. அம்மாநிலத்தின் ஹவுரா மாவட்டம் ஜகத்பல்வபூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 4 பேரும் உயிரிழந்தனர். மேலும், மின்னல் தாக்கி 2 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/west-bengal-lightning-strike-kills-4




