Vollständiger Artikel
கோவை சாய் பாபா காலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு அபிஷேக் என்ற 6 வயது மகனும், 3 வயதில் வர்ஷினி என்ற மகளும் இருந்தனர். இவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரித்து சென்ற நிலையில், குழந்தைகளுடன் திவ்யா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜதுரை (35) என்பவருடன் திவ்யாவிற்குத் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இதற்கு இடையூறாக இருந்ததாக 6 வயது மகன் அபிஷேக்கை, கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதியன்று ராஜதுரையும், திவ்யாவும் குச்சியால் அடித்து கொடுமைப்படுத்திய நிலையில் சிறுவன் உயிரிழந்தான். திவ்யா இந்த வழக்கில் சாய்பாபா காலனி காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து திவ்யாவையும், அவரது ஆண் நண்பர் ராஜதுரையையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பு வழங்கினார். திவ்யா, ராஜதுரை ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நிலையில், இருவருக்கும் தனித்தனியாக தண்டனை விபரங்கள் அறவிக்கப்பட்டது. ராஜதுரை ராஜதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டணையும், 13 ஆண்டுகள் சிறை தண்டணையும், 1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டன. மேலும் திவ்யாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டணையும், ஆயுள் தண்டணையும் விதித்தார். கொடூரமான கொலை வழக்கு என்பதால் தண்டனையை ஏக காலத்தில் இல்லாமல், தனித்தனியாக தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்திரவிட்டார். ராஜதுரை 13 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்த பின்பு ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும், திவ்யா 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த பின்பு ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி விவேகானந்தன் தெரிவித்தார். ``மது அருந்த தண்ணீர் பாட்டில் தராததால் அடித்துக் கொன்றோம்" - வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் பகீர்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten




