தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தன்னுடைய அலுவலகத்தை மாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்போது அரசே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. CM Vijay தலைமைச் செயலகத்தில் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டையின் முகப்பில் முதல் தளத்தில் முதல்வருக்கான அறை அமைந்திருக்கிறது. அதில்தான் முன்னாள் முதல்வர்களும் தங்கள் அலுவல்களை கவனித்துக் கொண்டிருந்தனர். முதல்வர் விஜய்யும் இரண்டரை மாதங்களாக அந்த அறையில்தான் தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இப்போது முதல்வரின் அறை கோட்டை வளாகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 வது தளத்திற்கு மாறவிருக்கிறது. இதுசம்பந்தமாக தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'இடநெருக்கடி காரணமாக முதல்வர் மற்றும் அவரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை நாமக்கல் மாளிகையின் 10 வது தளத்துக்கு மாற்றப்படுகிறது' எனக் கூறப்பட்டிருக்கிறது. Vijay அந்த இடத்தில் ஏற்கனவே இருக்கும் அதிகாரிகளுக்கு மற்ற தளங்களிலும் கலைவாணர் அரங்கத்திலும் தற்காலிகமாக மாற்று இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமான வட்டத்தினர், 'முதல்வருக்கு ஜோதிடத்தின் மீது எப்போதுமே நம்பிக்கை உண்டு. அவரின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் தான் கடலை பார்த்த மாதிரியாக உச்சத்தில் இருக்கும் இடத்தில் அறையை அமைக்க வேண்டும் ஆலோசனை கொடுத்தார். அதேமாதிரி, முதல்வரின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமியும் விஷ்ணு ரெட்டியும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் பைல்களை பார்க்கவும் முதல்வர் சேம்பரில் போதிய இடமில்லை. அவர்களுக்கும் சௌகரியமாக ஒரு இடம் வேண்டும் என்பதால்தான் தன்னுடைய அறையை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்வர் மாற்றியிருக்கிறார்' என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/why-is-tamil-nadu-chief-minister-vijay-vacating-his-office-at-fort-st-george-heres-the-reason



