சேலம், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரவனூர் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 34). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். ராமருக்கு ஏற்கனவே திருமணமாகி கவுசல்யா என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் ராமர் இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முதல் மனைவி கவுசல்யா ராமரிடம் இதுகுறித்து கேட் டுள்ளார். அப்போது கோபமடைந்த ராமர், கவுசல்யாவை சரமாரியாக தாக்கி உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் ராமர், அவரது சகோதரி நித்யா, அண்ணன் பரிமணன் ஆகிய 3 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-a-man-for-marrying-a-second-time-without-his-first-wifes-knowledge




