பிஷெக் கிர்கிஸ்தான் நாட்டு தலைநகர் பிஷெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருந்து பிரதமர்மோடி நேற்றிரவு சென்றார்.இன்று ஈரான் அதிபரை தனியாக சந்தித்துப் பேசினார். மேலும் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடி அடுத்தடுத்து பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டு உஸ்பெகிஸ்தானுக்கு சென்றார். அந்தநாட்டு தலைநகர் தாஸ்கண்டில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள இந்தியர்களையும் சந்தித்தார். நேற்று அந்த நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியேவை அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேசினார். அப்போது 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் குறிப்பாக உஸ்பெகிஸ்தானிடம் இருந்து யுரேனியம் வாங்குவது குறித்த ஒப்பந்தமும் அடங்கும். பிரதமர் மோடிக்கு உயரிய விருது ஏற்கனவே அமெரிக்கா, கனடா, கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆஸ்திரேலியா நாடுகளுடனும் இந்தியா யுரேனியத்தை வாங்க ஒப்பந்தம்போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான்நாட்டு அதிபர் அதன் உயரிய விருதையும் வழங்கி கவுரவித்தார். உஸ்பெகிஸ்தான் நாட் டின் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதன் பிறகு நன்ளிரவில் அங்கிருந்து கிர்கிஸ்தான் நாட்டுக்கு சென்றார். அதன் தலைநகரத்தின் பெயர் பிஷக் என்பதாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு அந்த நகர விமான நிலையத்திற்கே அந்த நாட்டின் அதிபர் அடில்பெக் கசிமலியேவ் நேரில் சென்று வரவேற்றார். பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. பிஷக் நகரில் இன்றும் நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் 10 நாடுகள் உள்ளன. அதாவது சீனா.இந்தியா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ் தான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டின்போது பல்வேறுநாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகவும் சந்தித்துப் பேச உள்ளார். அந்தவகையில் ஈரானிய அதிபர் பெசஸ்கியானை இன்று சந்தித்துப் பேசி உள்ளார். அப்போது மேற்காசிய போர் விவகாரம் குறித்து விவாதித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. கிர்கிஸ்தானில் பிரதமர் மோடி உடன் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு இருதரப்பு உறவுகளின் முன்னேற்றங்கள், ரஷ்யா-உக்ரைன் போர், மேற்காசிய சூழல், கச்சா எண்ணெய் விவகாரம், இருநாட்டு வர்த்தக உறவுகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். ஒரே காரில் பயணம் பிஷ்கெக்கில் நடைபெறும் சர்வதேச நாமாட் (Nomad) விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காகப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் ஒரே காரில் இணைந்து பயணித்தனர். சர்வதேச மேடையில் பிரதமர் மோடி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் அரங்கில் நடைபெற்ற 6வது உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகளின் (World Nomad Games) பிரமாண்ட தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அதனை தொடர்ந்து சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து பேசுவார். சீன அதிபரை சந்திக்கும்போது எல்லை விவகாரம் குறித்து பேசும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க புதினும், ஷி ஜின் பிங்கும் வர உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/shanghai-cooperation-organization-conference-modi-and-putin-travel-in-the-same-car



