சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்கிறார். காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில், 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' என்ற நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிர மாண்டமான 'டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்' உற் பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. விஜய் 'பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப் பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. வணிக வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தை இன்று முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். கண்ணாடி தொழிற்சாலை முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் செயல்படும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின்ட் கோபின் நிறுவனமும், தமிழக அரசுடன் இணைந்து புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் உலகத்தரத்திலான கண்ணாடி தயாரிப்பு வளாகத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதனை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நிசான் கார் கம்பெனியையும் முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspects-kanchipuram-industrial-complex




