சென்னை, தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தார்மீகப் பொறுப்பை ஏற்று தனது பதவியை விலகியுள்ள தர்மேந்திர பிரதான் அவர்களின் முடிவு, ஜனநாயகப் பொறுப்புணர்வின் உயரிய எடுத்துக்காட்டாகும். ஆனால், மத்திய கல்வி மந்திரியாக அவர் நாட்டிற்காக ஆற்றிய மகத்தான பங்களிப்பை எதுவும் மங்கச் செய்ய முடியாது. தேசிய கல்விக் கொள்கை (NEP) உருவாக்கம் மற்றும் இந்திய கல்வி அமைப்பில் அவர் கொண்டு வந்த தொலைநோக்குப் பார்வையுடனான சீர்திருத்தங்கள், நாட்டின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன. நான் நன்றியோடு ஒன்றை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். தன்னலமற்ற சேவை புதுச்சேரி துணைநிலை கவர்னராக நான் பணியாற்றிய காலத்தில், ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளிகளை CBSE பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வர தீர்மானித்தோம். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை செயல்படுத்துவதற்கு தர்மேந்திர பிரதான் முழு மனதுடன் ஆதரவு ஆதரவளித்து அத்தனை முயற்சிகளுக்கும் உடன் நின்றார்கள்.அதன் பின்னர் புதுச்சேரிஅரசு பள்ளிகளுக்குச் சென்று, சமூகத்தின் மிகவும் விளிம்புநிலை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் CBSE கல்வியின் மூலம் புதிய தன்னம்பிக்கையுடனும் உயர்ந்த கனவுகளுடனும் படிப்பதை நான் நேரில் கண்டேன். கல்வித் துறைக்கும், பாரதத்திற்கும் அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவையை நாடு என்றும் நன்றியுடன் நினைவுகூரும். இனிவரும் காலங்களிலும் அவர் தனது திறமையாலும் அர்ப்பணிப்பாலும் நாட்டிற்கு மேலும் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக சேவை செய்வார் என்ற முழு நம்பிக்கை எனக்குள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-country-will-always-remember-dharmendra-pradhans-service-tamilisai-soundararajan




