டல்லாஸ் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் 2 முறை சொந்த அணிக்கு எதிராக கோல் அடித்தவர் என்ற வரலாற்றிலேயே மோசமான சாதனையை எகிப்து கால்பந்து வீரரான முகமது ஹானி படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில், ஆஸ்திரேலிய வீரர் எய்டன் ஓ நீல், தனக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தபோது, அது ஹானியின் தலை மீது பட்டு, பின்னர் கோலாக மாறியது. இதனால், போட்டியின் போக்கே மாறியது. 1-1 என போட்டி சமன் அடைந்து, கூடுதல் நேரத்திற்கு வழிவகுத்தது. பின்னர் பெனால்டி ஷூட்அவுட் முறைக்கும் சென்றது. விளையாட முடியாத சூழல் இந்த சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், ஆஸ்திரேலியாவின் மற்றொரு வீரரான கன்னோர் மெத்கால்ப் மீது மோதி, ஹானி கீழே விழுந்து விட்டார். அவருக்கு சக வீரர்கள் உதவ ஓடி வந்தனர். ஹானியால் சில நிமிடங்கள் வரை போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த போட்டியில் கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படவில்லை. இதனால், பெனால்டி ஷூட்அவுட் முறையில் இரு அணிகளும் விளையாடின. இதில், 2-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை எகிப்து வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றது. போட்டி தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறியது. லீக் போட்டி இதே போட்டி தொடரில் நடந்த லீக் போட்டி ஒன்றில், பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, இதேபோன்று சொந்த அணிக்கு எதிராக முகமது ஹானி கோல் அடித்ததில், ஆட்டம் 1-1 என டிரா ஆனது. இதனால், ஒரே போட்டி தொடரில் 2 முறை சொந்த அணிக்கு எதிராக கோல் அடித்த மோசமான சாதனையை முகமது ஹானி தன்வசம் வைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/football/black-magic-for-own-team-egyptian-football-player-with-worst-record-in-world-cup-history




