பாலக்காடு: மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் வளர்ப்பு தந்தையை கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். கேரளம் மாநிலம் மலம்புழா குர்திகடவு பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 38). இவரும் இவரது வளர்ப்பு மகன் சதீசும் நேற்று இரவு வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது மதுவை ஷேர் செய்வதில் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், சதீஷ் கத்தியால் வினோத்தை குத்தி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சதீஷை தேடி வருகின்றனர். மதுபோதையில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/youth-stabs-stepfather-to-death-after-drunken-brawl-in-keralam




