சென்னை, குடிப்பழக்கம் கொண்டாடப்பட வேண்டிய விஷயம் கிடையாது. அதேநேரத்தில் அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று தவிப்போருக்கு இந்தப்படம் ஊக்கம் தரும். என இயக்குனர் நாகராஜ் கூறியுள்ளார். நாகராஜ் எழுதி இயக்கிய 'ஆகாயம்' டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில் தினந்தோறும் நாகராஜ் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் 'ஆகாயம்'. இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகுநந்தன் இசையமைத்துள்ளார். குடியை கொண்டாடாதீங்க. இந்த புதிய படம் குறித்து இயக்குனர் நாகராஜ் கூறும்போது. 'என்னைப் போல வாழ்க்கையில் தவறான பாதைக்குச் சென்று மீண்டும் திரும்பி வர நினைப்பவர்கள் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். குடிப்பழக்கம் கொண்டாடப்பட வேண்டிய விஷயம் கிடையாது. அதேநேரத்தில் அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று தவிப்போருக்கு இந்தப்படம் ஊக்கம் தரும். என்னால் மீண்டும் வர முடிந்தது என்றால், என்னைப் போல இன்னும் நிறைய பேராலும் முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் குடியைப் பற்றிப்பேசுவது போரடிக்கும் வகையில் இருக்காது. அழகான காதல் கதைக்குள், வாழ்க்கைக்கு பயனுள்ள ஒரு சிறிய விஷயமாகத்தான் அது இருக்கும்". என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/drinking-is-not-something-to-be-celebrated-director-of-the-film-aagayam




