விமல், ஸ்ரேயா நடித்த ‘சண்டக்காரி’ படத்தின் டிரெய்லர் வெளியானது. ‘திரிஷ்யம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது. திலீப் மற்றும் மம்தா மோகன்தாஸ் நடிப்பில், ஜீத்து ஜோசப்பின் 2012-ஆம் ஆண்டு மலையாளப் படமான ‘மை பாஸ்’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்திற்கு, தற்போது ‘சண்டக்காரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபு மற்றும் சத்யன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘சண்டக்காரி’ ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் என்று கூறப்படுகிறது. ‘சிவாஜி’ படப்புகழ் ஸ்ரேயா காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’ ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். படத்தின் கதை லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. 'சிவாஜி' படப்புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார்.அதிகாரி - ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும், மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன. காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையேயான 'சண்டை'தான் படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். பிரபு குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர்.விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளார். கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் கலக்கியுள்ளார். இவர்களுடன் ரேகா, தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார். கனல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ‘சண்டக்காரி’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு இந்நிலையில், விமல், ஸ்ரேயா நடித்த “சண்டக்காரி” படம் வரும் 18ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.விமல்- ஸ்ரேயா இணைந்து நடிக்கும் இந்த புதிய கூட்டணி, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆறு ஆண்டுகளாக இருந்த இந்தப்படம் வெளியாகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிரெய்லர் வெளியீடு இந்த நிலையில், ‘சண்டக்காரி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் வரும் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vimal-and-shreyas-sandakari-film-trailer-out




