விருதுநகர், விருதுநகர் மாவட்டத்தில் ஒருவருடைய ஆட்டு தொழுவத்திற்குள் புகுந்த 3 வெறிநாய்கள் ஆடுகளை கடித்துக்குதறியதில் 15 ஆடுகள் பலியாகின. ஆடுகளை கடித்த வெறிநாய்கள் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் மகாலிங்கம் என்பவர் 35-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவரது ஆட்டு தொழுவத்திற்குள் புகுந்த 3 வெறிநாய்கள் ஆடுகளை கடித்துக்குதறின. 15 ஆடுகள் பலி இதில் 15 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 10 ஆடுகள் காயம் அடைந்தன. உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மகாலிங்கம் கோரிக்கை விடுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-15-sheep-die-after-being-bitten-by-rabid-dogs




