சென்னை, சென்னையை சேர்ந்த 31 வயது பெண்ணை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி அரும்பாக்கத்தில் உள்ள விடுதிக்கு அந்த பெண் சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த நபர், அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அப்பெண் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். காயமடைந்த பெண்ணை பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரும்பாக்கம் போலீசார், பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-young-woman-stabbed-after-trusting-man-who-invited-her-for-sexual-relations



