திருவானைக்காவல், திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் கடந்த 5-ந் தேதி கொடியேற்றப்பட்டது. தெப்ப உற்சவம் இதைத்தொடர்ந்து தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 9-ம் நாளன்று அம்பாள் கோரகத்தில் எழுந்தருளினார். 10-ம் நாளான ஆடிப் பூரத் திருநாள் அன்று அம்பாள் மடிசார் புடவை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருடத்தில் ஒரு நாள் மட்டும் அம்பாள் இந்த திருக்கோலத்தில் எழுந்தருளுவது வழக்கம். விழாவின் 12-ம் நாளான நேற்று, சிகர நிகழ்வான தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சூரிய தீர்த்த திருக்குளத்தில் அஸ்வ தேவருக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமியும், அம்பாளும் உற்சவ மண்டபத்தில் இருந்து பஞ்ச மூர்த்திகள், பிரியாவிடை அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு சூரிய தீர்த்த குளத்திற்கு மாலையில் வந்தனர். அங்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளியதும், தெப்ப உற்சவம் தொடங்கியது. மகா தீபாராதனை 5 முறை சுவாமியும், அம்பாளும் திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-வது சுற்றில் தெப்ப மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தெப்ப உற்சவம் நிறைவுபெற்றதும் தெப்பத்தில் இருந்து புறப்பட்டு சுவாமியும், அம்பாளும் 4-ம் பிரகாரம் சுற்றி வந்து சன்னதியை அடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/theppotsavam-at-thiruvanaikaval-jambukeshwarar-akilandeswari-temple




