ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், இந்தியாவின் வித்யா ராமராஜ் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். மேலும், இதே பிரிவில் இந்திய தடகள ஜம்பாவன் பி.டி. உஷாவின் சாதனையையும் முறியடித்தார். 1984ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டும் ஒட்டத்தில் 55.42 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்த நிலையில், வித்யா ராமராஜ் 54.75 விநாடிகளில் இலக்கை அடைந்து பி.டி. உஷாவின் தேசிய சாதனையை முறியடித்தார். கடந்த 2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பி.டி.உஷாவின் சாதனையை வித்யா ராமராஜ் சமன் செய்திருந்த நிலையில், தற்போது அவரது சாதனையை முறியடித்துள்ளார். இதேபோல இந்த ஆசிய போட்டிகளில் ரிலே ஒட்டத்திலும் வித்யா ராமராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வித்யா ராம்ராஜ் கோவை மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ராமராஜ், மீனா தம்பதியினரின் 28 வயது மகள் வித்யா. ராமராஜ் டிரைவராக பணியாற்றி வந்தார். ஈரோட்டில் கல்லூரி படிப்பை முடித்த வித்யா, தற்போது பாலக்காடு ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பி.டி. உஷாவின் தேசிய சாதனையை வித்யா முறியடித்து இருப்பது, அவரது பெற்றோருக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. வித்யா ராம்ராஜ் இதுகுறித்து வித்யாவின் தாய் மீனா கூறியதாவது, “எனக்கு மூணு பொண்ணுங்க. நித்யாவும், வித்யாவும் டிவின்ஸ். ரெண்டு பேருக்கும் சின்ன வயசுல இருந்து ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப ஆர்வம். நாங்க மொதல்ல ஈச்சனாரியில வாடகை வீட்டுல இருந்தோம். என் கணவர் டிரைவரா இருந்தார். அவரோட ஒரே வருமானத்தை வைச்சு குடும்பத்தை நடத்த ரொம்ப சிரமப்பட்டோம். அப்போ தினமும் ஈச்சனாரி விநாயகர் கோயிலுக்கு போயி, என் பொண்ணுகளுக்கு நல்ல வாழ்க்கை கொடுனு அழுது வேண்டுவேன். ஸ்கூலில் படிக்கும்போது வித்யா, நித்யாவிற்கு ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் இருப்பதால, ஹாஸ்டலில் சேர்த்து விடுங்கனு அவங்க பி.டி. மிஸ் சொன்னாங்க. ஆனா கோயம்புத்தூருல கேர்ல்ஸ் ஹாஸ்டல் இல்லாதனால, ஈரோட்டுல ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைச்சோம். ராமராஜ் - மீனா ஸ்போர்ட்ஸ் கோட்டால ஈரோட்டுல ஒரு காலேஜ்ல ரெண்டு பேரும் டிகிரி முடிச்சாங்க. இப்போ நித்யா இன்கம் டேக்ஸ்லயும், வித்யா பாலக்காடு ரயில்வேயிலும் வேலை பாக்குறாங்க. மூணு வருசத்துக்கு முன்னால சீனாவுல நடந்த ஆசியன் கேம்ஸ்ல வித்யா, நித்யா ரெண்டு பேரும் கலந்துகிட்டாங்க. அப்போ வித்யா 2 சில்வர், 1 வெண்கலம் என மூணு மெடல் வாங்குனா. நானூறு மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்துல பி.டி. உஷாவின் சாதனையை சமன்பண்ணுனா. அப்போ இருந்து பி.டி. உஷா சாதனையை முறியடிக்கணும்னு டிரைனிங் எடுத்திட்டு வந்தா. அவளோட மூணு வருச உழைப்பு இப்போ நனவாகி இருக்கு. இப்போ பி.டி. உஷா சாதனையை என் பொண்ணு முறியடிச்சது எங்களுக்கு சொல்ல முடியாதளவு ரொம்ப சந்தோசம். வித்யாவின் கோச் நேபாள் சிங் நல்லா சப்போர்ட் பண்ணுனாரு. நித்யாவுக்கு காலில் அடிபட்டதால இந்த ஆசியன் கேம்ஸ்ல கலந்துக்க முடியல. அடுத்த போட்டியில கலந்துக்க நித்யாவும் ரெடியாகிட்டு வருகிறாள். ரெண்டு பேரும் இந்தியாவிற்காக இன்னும் நிறைய மெடல் வாங்கணும்கிறது எங்களோட ஆசை” என்றார் நெகிழ்வுடன். ’சினிமாவை மிஞ்சிய சேஸிங்’-கார் மேற்கூரையில் 40கி.மீ தொங்கியபடி சென்று கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://sports.vikatan.com/heartwarming-details-shared-by-the-mother-of-vidya-ramraj-who-broke-pt-ushas-record




