சென்னை, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குகிறார். இந்தப் படத்தினை, '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. விஷ்ணு எடவன் எழுதிய வரிகளுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய 'கண்ணக்குழியா' பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகவிருந்த ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு அறிவித்தது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரெய்லருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், ‘ஹாய்' படத்தின் ‘குடிகார நெஞ்சு’ பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-song-kudikaara-nenju-from-the-movie-hi-starring-kavin-and-nayanthara-is-set-to-be-released-tomorrow




