சென்னை, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தினமும் தலைமைச் செயலகம் வந்து அரசுப் பணிகளை கவனிப்பதும், அவ்வப்போது பிற்பகலில் சில இடங்களுக்கு சென்று ஆய்வும் நடத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டார். அதன்படி, இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு காரில் வந்தார். அவரை மெட்ரோ அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின்னர், அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் முதல்-அமைச்சர் விஜய் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார். நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கும் அவர், அங்குள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். அடுத்து, கிண்டி கத்திப்பாரா செல்லும் அவர், அங்கு நடைபெறும் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, போரூர் - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரெயில் ஓட்டத்தையும் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்ய இருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-traveled-on-the-metro-train




