சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.). பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த் தியதன் மூலம் 16 தரபுள்ளிகளை கூடுதலாக சேகரித்த ஸ்ரீச ரனி மொத்தம் 804 புள்ளிகள் பெற்றுள்ளார். 20 ஓவர் போட்டி தரவரிசையில் இந்திய பவுலர் ஒருவர் 800 புள்ளிகளை கடப் பது இதுவே முதல் முறையாகும். இந்த வகையில் ஆஸ்திரே லியாவின் மேகன் ஸ்கட் 806 புள்ளிகள் எடுத்ததே அதிகபட்ச மாகும். ஸ்ரீசரனி ஆசிய விளையாட்டிலும் அசத்தினால் இந்த சாதனையை முறியடித்து விடுவார். மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 4 இடங்கள் உயர்ந்து 729 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு (723 புள்ளி) சரிந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/womens-cricket-rankings-indian-player-srisarani-sets-a-new-record




