மும்பை பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளியுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில், மராட்டியத்தில் 112 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி ஷாசாத் பாட்டி. அந்நாட்டில் தாதாவாகவும் வலம் வரும் இவர், சமூகவலைத்தளங்கள் மூலம் இந்திய இளைஞர்களை தொடர்பு கொண்டு, அவர்களை மூளைச்சலவை செய்து தேசவிரோத செயல்களில் ஈடுபட தூண்டி விடுகிறார் என குற்றச்சாட்டு எழுந்தது. இளைஞர்களுக்கு நிதி உதவி தருவதாக ஆசைவார்த்தை கூறி போதைப்பொருள், ஆயுத கடத்தலிலும் ஈடுபடுத்த முயற்சி செய்து உள்ளார். இதில் பெரிய கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. ஷாசாத் பாட்டியின் கூட்டாளிகளான ஆபித் ஜாத், அஜ்மல் குஜார், முகமது மேமன், ராணா உசேன், அஷ்ரப் பஷீர் ஆலம் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர். 112 பேர் இவர்கள் முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் இந்திய இளைஞர்களை தொடர்பு கொண்டு, அவர்களை மூளைச்சலவை செய்து தேசவிரோத செயல்களில் ஈடுபடும்படி தூண்டியுள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில், மராட்டியத்தில் 112 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 6 பேர் கைது அவர்களிடம் பயங்கரவாத தடுப்புப்பிரிவை சேர்ந்த (ஏ.டி.எஸ்.) 14 பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக நேற்று காலை முதல் மும்பை, தானே, குர்லா, பாந்த்ரா, ஜோகேஷ்வரி, நவி மும்பை, மீரா சாலை, பயந்தர், சாங்லி, சடாரா மற்றும் சத்ரபதி சாம்பாஜிநகர் உள்ளிட்ட மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஏ.டி.எஸ். குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தியதில் இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் அதிகாரிகளின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு சில நாட்களுக்கு முன்பு, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஷாசாத் பாட்டியுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய 6 பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/links-to-a-pakistani-isi-spy-112-people-questioned-in-maharashtra




