கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். 27 வயதான ராஜா முத்துப்பாண்டி, ஸ்னாட்ச் பிரிவில் 126 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவும் தூக்கி, மொத்தம் 286 கிலோ எடையைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார் இந்தப் பிரிவில் மலேசியாவின் அஸ்னில் பிடின் 299 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். ராஜா முத்துப்பாண்டி ராஜா முத்துப்பாண்டி வென்ற இந்த வெள்ளிப் பதக்கம், அந்த நாளில் இந்தியா பளுதூக்குதலில் வென்ற மூன்றாவது பதக்கம் ஆகும். முன்னதாக மீராபாய் சானு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தையும், ரிஷிகாந்தா சிங் சனம்பம் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் நான்காக உயர்ந்தது. காயத்திலிருந்து கம்பேக். வெற்றிக்காகப் போராடிய ராஜா! இன்று காமன்வெல்த் மேடையில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் ராஜா முத்துப்பாண்டியின் பயணம் அவ்வளவு எளிதானதல்ல. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியின்போது, அவரது வலது முழங்கையில் தசைநார் (Ligament) கிழிவு ஏற்பட்டது. அந்தக் காயம் அவரது விளையாட்டு வாழ்க்கையே முடிவுக்கு வரும் அளவுக்கு கடுமையானதாக இருந்தது. அறுவை சிகிச்சை, நீண்டகால ஓய்வு, மீண்டும் உடலைத் தயார்படுத்தும் கடினமான பயிற்சிகள் என பல சவால்களை எதிர்கொண்டார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2021 தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் களமிறங்கி தனது மீள்வரவை பதிவு செய்தார். ராஜா முத்துப்பாண்டி 2025. திருப்புமுனையாக மாறிய ஆண்டு! ராஜா முத்துப்பாண்டியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை 2025-ஆம் ஆண்டில்தான் வந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 296 கிலோ (128 கிலோ ஸ்னாட்ச் + 168 கிலோ கிளீன் & ஜெர்க்) என்ற தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அந்தச் சாதனையே, இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீரர்களில் ஒருவராக அவரை உயர்த்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://sports.vikatan.com/muthupandi-raja-makes-his-mark-at-commonwealth-games




