சென்னை, தனது வாழ்வையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த விஜயகாந்தின் நினைவுகளை போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- வாழ்த்து தேமுதிக நிறுவனத் தலைவர் அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்ததோடு, ஏழை எளிய மக்களின் மீது அளவற்ற அன்பும், கொடுத்து சிவந்த கரங்களும் கொண்ட மக்கள் தலைவராகத் திகழ்ந்தவர். நேர்மை, துணிவு, மக்கள் பணி எனத் தனது வாழ்வையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/vijayakanths-birthday-annamalai-pugazharam




