இஸ்லாமாபாத், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகப் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. டிரோன்கள் தாக்குதல் இந்நிலையில், அங்குள்ள ஹங்கு மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நள்ளிரவு திடீர் தாக்குதல் நடத்தினர். 'குவாட்காப்டர்' எனப்படும் அதி நவீன டிரோன்கள் மூலம் போலீஸ் சாவடி மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் பயங்கர தாக்குதலை நடத்தினர். 11 போலீசார் பலி இதையடுத்து இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் நடந்த பயங்கர சண்டையில் 11 போலீசார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாயினர். போலீசாரின் பதில் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எல்லையில் டிரோன் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 28 பேர் காயம் முன்னதாக ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள ஹங்கு மாவட்டத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலின்போது, சோதனைச் சாவடியை தாக்குவதற்கு முன்னதாக, வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட டிரோன்களை (quadcopters) பயன்படுத்தி பயங்கரவாதிகள் முதலில் தாக்குதல் நடத்தியதாக காவல் துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. உயிரிழந்த 11 போலீசாரை தவிர, காயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/attack-on-northwest-pakistan-police-post-kills-11-officers




