புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், 2016-ல் இருந்து 2021 வரை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் தனது மனைவி ரம்யா பெயரிலும், தனது பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கடந்த 2021-ல் வழக்குப் பதிவு செய்தனர். மறுநாள் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, கல்குவாரி, அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் 56 இடங்களில் ஊழல் தடுப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணையின்போது, விஜயபாஸ்கர், ரம்யா ஆகியோர் அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இதன்படி சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், இன்றைக்கு வழக்கு விசாரணையில் இருவரும் ஆஜராகவில்லை. இதனை அடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/disproportionate-assets-case-against-former-minister-c-vijayabaskar-adjourned-to-august-24




