நத்தம், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் இடையிலான போட்டி நத்தம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சரிவில் இருந்து மீளும் முனைப்பில் கில்லீஸ் 4 முறை டி.என்.பி.எல். தொடரின் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது முதலாவது ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சிடம் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சிடம் பணிந்தது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 'பிளே-ஆப்' வாய்ப்பில் நீடிக்க இனி ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும். இதனால் அந்த அணி தனது தவறுகளை திருத்தி சரிவில் இருந்து மீண்டு வரும் முனைப்புடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை. கில்லீஸ் பேட்டிங்கை போன்று பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். முன்னாள் சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சிடம் வீழ்ந்தது. வெற்றிக் கணக்கை தொடங்க சேப்பாக் சூப்பர் கில்லீசும், 2-வது வெற்றியை ருசிக்க திண்டுக்கல் டிராகன்சும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 14 போட்டியில், இதுவரை சேப்பாக் அணி 9 வெற்றிகளையும், திண்டுக்கல் அணி 5 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறுமா நெல்லை? அதே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியுடன், நெல்லை ராயல் கிங்ஸ் அணி மோதுகிறது. நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ் முதல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை பதம் பார்த்தது. முதல் இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று நல்ல நிலையில் உள்ள நெல்லை ராயல் கிங்ஸ் அணி தனது வீறுநடையை தொடர ஆர்வம் காட்டும். அத்துடன் அந்த அணி ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும். அதேநேரத்தில் திருப்பூர் அணி உத்வேகத்தை தொடர தனது முழு பலத்தை வெளிப்படுத்தும் எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 9 போட்டிகளில் இதுவரை திருப்பூர் அணி 6 வெற்றிகளையும், நெல்லை அணி 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/chepauk-super-gillies-aim-to-bounce-back-from-a-slump-clash-against-dindigul-team-today




