தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாட்டின் மீது எந்த அக்கறையும் இல்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான இடத்தை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய வேண்டும் என்றும், இந்தி மொழியை கற்க கூடாது என்ற குறுகிய மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் வியப்பாக இல்லை. காரணம் தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் மேகதாது அணை விவகாரம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் போன்ற வழக்குகளில் உங்களின் மெத்தனப் போக்கால் தமிழர்களின் உரிமைகளை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பறிகொடுத்து வருகிறீர்களே CM Sir. முதல்வர் விஜய் "தங்களின் டெல்லி எஜமான் பாஜகவின்" நன் மதிப்பை பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வாதிடாமல் தமிழ்நாட்டை அவமதிப்பதும்,தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதும், ஒன்றிய அரசு தரவேண்டிய கல்வி நிதியை கேட்டுப் பெறாமல் கள்ள மவுனம் சாதிப்பதும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஒன்றிய அரசின் முடிவுக்கு ஒப்புதல் என்று தொடர்ந்து நேரடியாக ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்து விட்டீர்களே CM sir! ஆட்சிக்கு வந்த உங்களுக்கு கொள்கையோ, தமிழ் பற்றோ, தமிழ்நாட்டின் மீது பற்றோ, தமிழ்நாட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற மனப்பான்மையோ இல்லாமல், தங்களை சுற்றி இருக்கும் "ரெட்டி கேங் துணையோடு" ஆட்சி, அதிகாரம் மற்றும் பணம் மீது மோகம் கொண்டு பாஜகவின் உதவியோடு ஆட்சி அமைத்து சில கல்லாப்பெட்டி கட்சிகளின் கூட்டணியோடு ஆட்சியில் தொடரும் விஜய் அவர்களே! சிலரை சிலநாள் ஏமாற்றலாம்! பலரை பல நாள் ஏமாற்றலாம்! எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது CM sir! உங்கள் மக்கள் விரோத போக்கை தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள் உங்கள் அரசியல் ஆட்டத்திற்கு விரைவில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுகட்ட தயாராகி விட்டார்கள் CM Sir!" எனக் குறிப்பிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/former-speaker-appavu-has-leveled-severe-criticism-against-chief-minister-vijay




