கேரளாவைச் சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் தேவன், தமிழில் ஏராளமான சினிமாக்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் சுமார் 30 சினிமாக்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் தேவன் அரசியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2004-ல் நவகேரள பீப்பிள்ஸ் பார்ட்டி என்ற கட்சியைத் தொடங்கினார். 2021 மார்ச் மாதம் பா.ஜ.க-வில் சேர்ந்த தேவன், அவரது கட்சியையும் பா.ஜ.க-வுடன் இணைத்தார். பா.ஜ.க-வில் மாநிலத் துணைத்தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஆகஸ்ட் 16 அன்று கணிக்சுகுளங்கரை தேவி கோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக நடிகர் தேவன் அறிவித்தார். பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் அவர் ராஜினாமா செய்தார். நடிகர் தேவனின் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால், ராஜினாமா முடிவில் தேவன் உறுதியாக இருந்தார். இந்த நிலைய கேரளத்தில் த.வெ.க கட்சியில் தீவிரமாக இயங்கிவரும் சதீஷ் தோந்நய்க்கல் என்பவர் நடிகர் தேவனை சாலக்குடியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். தேவனுக்கு கட்சித் துண்டை அணிவித்து அவரை த.வெ.க-வுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். மேலும், த.வெ.க கட்சியில் இணைய நடிகர் தேவன் விருப்பம் தெரிவித்துள்ளதாக சதீஷ் தோந்நய்க்கல் தெரிவித்திருந்தார். நடிகர் தேவன் இந்த நிலையில் பா.ஜ.க-விலிருந்து விலகிய நடிகர் தேவன் விரைவில் விஜய்யைச் சந்தித்து த.வெ.க-வில் இணைய உள்ளதாகவும், அவருக்கு கேரள மாநிலத்தின் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் செப்டம்பர் 10 அன்று சென்னை வந்து முதல்வர் விஜய்யை தேவன் நேரில் சந்திக்கவுள்ளதாகவும், இந்தச் சந்திப்பிற்குப் பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. த.வெ.க-வில் இணைய தயாராகியுள்ளார் நடிகர் தேவன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தேவன், "நான் த.வெ.க-வில் இணைவதற்காக பா.ஜ.க-விலிருந்து விலகவில்லை. ராஜினாமா செய்த பின்னரே த.வெ.க தரப்பினர் என்னை அணுகி, விஜய்யைச் சந்திக்கும்படி விருப்பம் தெரிவித்தனர். அதற்காக செப்டம்பர் 10 அன்று சென்னை செல்கிறேன். கடந்த 2004-ல் நான் முன்வைத்த அரசியல் கொள்கைகளும் விஜய்யின் கொள்கைகளும் ஒன்றுபட்டுப் போகின்றன" என்றார். நடிகர் தேவனின் வருகை கேரள மாநிலத்தில் த.வெ.க-வுக்குப் பலம் சேர்க்கும் என சதீஷ் தோந்நய்க்கல் தெரிவித்துள்ளார். "எம்பி-க்களே இல்லாத தவெக-வை எப்படி இந்தியாக் கூட்டணில் சேர்ப்பது?" - மாணிக்கம் தாகூர் கேள்வி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/is-actor-devan-quit-bjp-joining-tvk-what-is-reason-for-meeting-vijay




