திருச்சி, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக, திருச்சி-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:12653/12654) ரெயில் சேவையில் 5 நாட்கள் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-சென்னை எழும்பூர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:12654), இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை சென்னை எழும்பூருக்கு பதிலாக மாம்பலம் ரெயில் நிலையத்தில் தனது சேவையை நிறைவு செய்யும். அதேபோல், சென்னை எழும்பூர்- திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:12653) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி வரை சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இரவு 12.05 மணிக்கு புறப்படும் என்று திருச்சி கோட்ட தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்க ளது பயணத்தை திட்டமிடுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-malaikottai-express-train-service




