வாணாபுரம், தச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமன் விநாயகம் (வயது 45) விவசாயி. குடிநீரை சுத்திகரிப்பு செய்து கேன்களில் தண்ணீர் விற்பனையும் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் எந்திரம் அருகில் விநாயகம் மற்றும் அவருடைய மகன் ஜீவின் (3) ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது தந்தை, மகன் இருவரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அரசு மருத்துவமனை அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு காட்டாம்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை டாக்டர் பரிசோதித்து பார்த்து விநாயகம் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவன் ஜீவினுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் ஜீவினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/father-dies-of-electrocution-3-year-old-son-critically-injured




