சென்னை, சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், காவல் துறை கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநில செயல் தலைவர் அச. உமர் பாரூக் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாலியல் அத்துமீறல்கள் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் எந்த வகையிலும் மன்னிக்க முடியாத, மனிதநேயமற்ற மிக கொடூரமான குற்றங்களாகும். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு பெரிய பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் சமூகத்தின் அச்சுறுத்தலாகவே கருதப்பட வேண்டும். தீவிர விசாரணை நடத்த வேண்டும் இக்குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையையும், இதில் சம்பந்தப்பட்டுள்ள நபரின் பண பலம் மற்றும் செல்வாக்கையும் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் மிகவும் கவனமாகவும் உறுதியாகவும் செயல்பட வேண்டும். எவ்வித வெளி அழுத்தங்களுக்கோ, அரசியல் காழ்ப்புணர்வுகளுக்கோ சிறிதும் இடமளிக்காமல், காவல் துறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தீவிர விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு இந்த சம்பவத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் தீர விசாரித்து, உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதிகபட்ச தண்டனை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதுவே எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட நினைப்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பாடமாக அமைய வேண்டும். மறுவாழ்வு உதவிகள் மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்வதோடு, அவர்களின் அடையாளங்கள் மற்றும் விவரங்களின் ரகசியத்தன்மையை அரசு முழுமையாக பாதுகாக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேவையான உளவியல் ஆலோசனைகளையும், தகுந்த மறுவாழ்வு உதவிகளையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/jem-veeramani-case-sexual-abuse-against-girls-unforgivable-crime-stbpai-party-demands-action




