Doctor Vikatan: எனக்கு இதயத்துடிப்பு எப்போதும் 100-க்கு மேல் உள்ளது. இசிஜி எடுத்துப் பார்த்தால் அதில் நார்மல் என்றே காட்டுகிறது. பிளட் பிரஷர் 140 / 100 என உள்ளது. எனக்கு சர்க்கரைநோய் கிடையாது. இந்நிலையிவ் இதயத்துடிப்பு குறித்து நான் கவலைப்பட வேண்டுமா? -உமா, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 90 வரை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் அந்தப் பிரச்னையை 'சைனஸ் டாகிகார்டியா' (Sinus Tachycardia) எனப்படுகிறது. அதாவது இதயம் வழக்கத்தைவிட வேகமாகத் துடிக்கிறது என்று அர்த்தம். ஆமைகள் உலகிலேயே மிக நீண்ட காலம் வாழ்வதற்குச் சான்றாக, அவற்றின் இதயம் நிமிடத்திற்கு 16 முறை மட்டுமே துடிக்கிறது. யார் மன அமைதியோடும், மகிழ்ச்சியோடும், வாழ்க்கையில் 'போதும்' என்ற மனநிறைவோடும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இதயத்துடிப்பின் அளவு குறைவாகவே இருக்கும். அதீத உற்சாகமாக, ஊக்கத்துடன் இயங்குபவர்கள், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் (Multitasking) ஆளுமை கொண்டவர்கள் போன்றோருக்கு இதயத்துடிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது. தைராய்டு பரிசோதனைDoctor Vikatan: உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா? இவ்வாறு இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது, இதய மருத்துவரை அணுகி எக்கோ (Echo) பரிசோதனை செய்து, இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டா, இதயத் துடிப்பைச் சீராக்கும் மருந்துகளின் மூலம் (Beta Blockers) துடிப்பின் அளவை 60 முதல் 90-க்குள் பராமரிக்க மருத்துவர்கள் வழிகாட்டுவர். தொடர்ந்து படபடப்பு இருப்பதாகக் கூறுபவர்களுக்கு, 'ஹைப்பர்தைராய்டிசம்' (Hyperthyroidism) பாதிப்பாலும் இதயத்துடிப்பு அதிகரிக்கலாம் என்பதால், தைராய்டு பரிசோதனையும் செய்ய வேண்டியிருக்கலாம். எனவே, இசிஜி (ECG) பரிசோதனை என்பது அடிப்படை சோதனை மட்டுமே. அதோடு நிறுத்திவிடாமல், இதயநல மருத்துவரையோ அல்லது குடும்ப மருத்துவரையோ அணுகி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/health/my-heart-rate-is-always-over-100-should-i-be-worried




