இந்தியாவில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் சீசன் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு புதிய வருமான வரிச் சட்டம் கொண்டு வந்துள்ளதால், சில மாற்றங்கள் வருமான வரிக் கணக்கு படிவங்களிலும் வந்துள்ளது. அந்த மாற்றங்கள் > இதற்கு முன்பு. 1. சம்பளம், ஒரு வீட்டு வாடகை, இதர வருமானங்கள் மூலம் 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள், 2. பிரிவு 112A-ன் கீழ் 1.25 லட்சம் ரூபாய் வரையிலான நீண்ட கால மூலதன ஆதாயம் (LTCG) கொண்டவர்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல்Gold: தங்கம், வெள்ளியில் இப்போது சூப்பர் நேரம்! முதலீட்டாளர்களே இப்போ நீங்க என்ன செய்யணும்? 3. 5,000 ரூபாய் வரை விவசாய வருமானம் உள்ள இந்தியக் குடிமக்கள் மட்டுமே ITR-1 படிவத்தை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், இனி அப்படி இல்லை. இனிமேல் இரண்டு வீடுகளை சொத்தாக வைத்திருபவர்களும் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஐ.டி.ஆர்-1 படிவத்தில் தாக்கல் செய்யலாம். இனி இரண்டு வீடுகளைச் சொத்தாக வைத்திருப்பவர்களும் ஐ.டி.ஆர்-1, 4 படிவத்தில் கணக்குத் தாக்கல் செய்யலாம். ஆனால், இனி சொத்தின் கூட்டுரிமை (Co-ownership), வாடகைதாரர்களின் விவரங்கள் போன்ற தகவல்களை குறிப்பிட வேண்டும். > புதிய படிவங்களில், தனிநபரின் தகவல் பகுதியில், மாற்று முகவரியைக் (Secondary address) குறிப்பிடுவதற்கான புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. > அடுத்ததாக, வரி விகிதங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் மூலதன ஆதாயப் பகுதியும் (Capital gains schedule) தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. > நன்கொடை தொடர்பான விவரங்களைக் குறிப்பிடும் முறை முன்பு இருந்ததை விட கடுமையாக்கப்பட்டுள்ளது. > Schedule 80G-ன் கீழ், இனி UPI அல்லது வங்கியின் பரிவர்த்தனை குறிப்பு எண் மற்றும் IFSC குறியீடு போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும். வருமான வரிக் கணக்குத் தாக்கல்PF: இனி ரூ.1,800-க்கு மேல் பிடித்தமாக செய்தாலும், உங்க விருப்பம் தேவை! - தெரிந்து கொள்ளுங்கள் > Schedule 80GGC-ன் கீழ் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு, அந்த அரசியல் கட்சியின் பெயர் மற்றும் பான் கார்டு விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது > பிரிவு 112A-ன் கீழ், இந்தியக் குடிமக்கள் தங்களுக்குக் கிடைத்த நீண்ட கால மூலதன ஆதாயத்தை இனி ஐ.டி.ஆர்-1 படிவத்திலேயே காட்டலாம். ஆனால், நீண்ட கால மூலதன ஆதாயத்தின் மூலம் வந்த லாபம் அந்த நிதியாண்டில் ரூ.1.25 லட்சத்தை தாண்டியிருக்கக் கூடாது. மேலும், முந்தைய கால நஷ்டங்கள் எதையும் இந்த நிதியாண்டு கணக்கில் கொண்டு வந்திருக்கக் கூடாது. > முதலீடுகளில் நஷ்டம் அடைந்தவர்கள், அதிக லாபம் ஈட்டியவர்கள் அல்லது சிக்கலான முதலீட்டுப் பரிவர்த்தனைகளைக் கொண்டவர்கள் தொடர்ந்து ITR-2 அல்லது பிற பொருத்தமான படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். > பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் அல்லது சொத்துக்களை விற்பனை செய்த முதலீட்டாளர்கள், சொத்தின் தன்மை மற்றும் வரி விதிப்பு முறைக்கு ஏற்ப தங்களின் பரிவர்த்தனைகளைப் பிரித்து, இன்னும் விரிவான விவரங்களை வழங்க வேண்டும். INCOME TAX | வரிக் கணக்குத் தாக்கல்புதிய EPF திட்டம்: எதற்கெல்லாம், எத்தனை முறை பாதியில் பணம் எடுக்க முடியும்? > ஐ.டி.ஆர்-3 படிவத்தைத் தாக்கல் செய்யும் வர்த்தகர்களுக்கு (Traders) கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயையும் லாபத்தையும், பொதுவான வணிக வருமானமாகக் காட்டாமல், இனி தனியாகக் காட்ட வேண்டும். > இன்ட்ரா டே (Intraday) வர்த்தகம் மற்றும் இதர வணிகம் சார்ந்த விவரங்களையும் தனித்தனிப் பிரிவுகளில் இன்னும் விரிவாகக் குறிப்பிட வேண்டும். > வர்த்தகர்கள் தங்களின் ஐடிஆரில் குறிப்பிடும் எண்கள், புரோக்கர் தரும் அறிக்கைகளுடனும் கணக்குப் புத்தகங்களுடனும் ஒத்துப்போக வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/governance/new-itr-forms-are-here-what-every-taxpayer-should-know




