சென்னை, எந்த விசாரணையும் நடத்தாமல், உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்காமல், நிர்வாகிகளின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுவுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தென்னிந்திய நடிகர் சங்க சட்டதிட்டத்தின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் வெற்றி பெற்றனர். இவர்களது பதவிக்காலம் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்துவிட்டது. இந்தநிலையில், நடிகர் சங்க கட்டிட கட்டுமானப் பணிகளைச் சுட்டிக்காட்டி, நிர்வாகிகள் பதவிகாலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து சங்கங்களின் பதிவாளர் 2025-ம் ஆண்டு அக்டோபர் 14-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் மனு தாக்கல் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், "எந்த விசாரணையும் நடத்தாமல், உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்காமல், நிர்வாகிகளின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று அரசு பிறப்பித்துள்ள உத்தரவு தன்னிச்சையானது. அதை ரத்து செய்ய வேண்டும். நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்த சங்கங்கள் பதிவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதிலளிக்க உத்தரவு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, மனுவுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 1-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/issue-regarding-the-extension-of-tenure-for-the-actors-association-office-bearers-high-court-order-issued-to-nassar-vishal-and-karthi




