திருப்பூர், தாராபுரத்தில் 5 முனைப்போட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியபாமா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லெட்சுமணன் உள்பட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. விஜய் பிரசாரம் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், பிரதான கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில், த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவு கேட்டு அந்த கட்சியின் அமைச்சர்கள் தாராபுரத்தில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரசாரத்தின் சிகர நிகழ்ச்சியாக த.வெ.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சரு மான விஜய் இன்று (புதன்கிழமை) தாராபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக தாராபுரத் தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் கொண்டரசம்பா ளையம் மாருதி நகரில் 54 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் விஜய் வாக்கு சேகரிக்க உள்ளார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு 'கியூஆர்' கோடுடன் கூடிய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உற்சாக வரவேற்பு இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (புதன்கிழமை) மதியம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்-அமைச்சர் விஜய் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார். அவர் வரும் வழியான குண்டடம், ஐ.டி.ஐ. கார்னர், அமராவதி சிலை ரவுண்டானா, பூக்கடை கார்னர், அண்ணாசிலை, தாராபுரம் போலீஸ் நிலையம், அலங்கியம் சிக்னல், உடுமலை ரோடு வரை சாலையின் வழிநெடுக மக்கள் திரண்டு இருந்து முதல்-அமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தபடி முதல் அமைச்சர் விஜய் வந்தார். தாராபுரம் நோக்கி செல்லும் வழியில் த.வெ.க கொடி நிறத்தில் தொண்டர் ஒருவர் வழங்கிய பிரம்மாண்ட மாலையை வாங்கி கழுத்தில் அணிந்துகொண்டார். மேலும் பிரசாரம் நடைபெறும் இடத்தில் ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரு அணியாக நின்று பிரசார பாடலுக்கு வைப் செய்து வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் இருந்து தாராபுரத்திற்கு பிரசார வாகனத்தில் ரோடு ஷோ சென்ற முதல்-அமைசர் விஜய்யிடம் மனு கொடுக்க பெண் ஒருவர் காத்திருந்தார். அவரை கவனித்த முதல்-அமைச்சர் விஜய், பிரசார வாகனத்தை நிறுத்தி மனுவைப் பெற்றுக்கொண்டு, பின்னர் ரோடு ஷோவைத் தொடர்ந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-holds-roadshow-in-tiruppur-receives-enthusiastic-welcome-from-the-public




