தஞ்சை, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இட்லி மாவு தயாரிக்கும் தொழிலுக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முதியவரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தி யாவசியப் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தஞ்சை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக் டர் ஜெகதீஸ்வரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா மற்றும் போலீசார் அதிராம்பட் டினத்தில் உள்ள சம்சுதீன் (வயது 66) என்பவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். இட்லி மாவு தயாரிக்க. அப்போது அங்கு 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் மொத்தம் 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து, இட்லி மாவு தயாரிக்கும் தொழிலுக்காக அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்சுதீனை கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/1100-kg-of-ration-rice-hoarded-at-home-seized-elderly-man-arrested




