ஆம்ஸ்டெல்வின், 16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) நடந்து வருகிறது. இதன் பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 6-1 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து முதலாவது வெற்றி பெற்றது. பெண்கள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்திய அணியில் சுனெலிதா (11-வது நிமிடம்), நவ்னீத் கவுர் (17-வது நிமிடம்), சுஷிலா சானு (25-வது நிமிடம்), தீபிகா (38-வது நிமிடம்), லால்ரெம்சியாமி (44-வது நிமிடம்), சாக்ஷி (45-வது நிமிடம்) கோலடித்தனர். தென்ஆப்பிரிக்கா தரப்பில் கய்லா டி வால் (55-வது நிமி \டம்) ஆறுதல் கோல் திருப்பினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/hockey/world-cup-opener-indian-womens-teams-first-win




