தென்காசி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும். தென்காசி கோட்டம் தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீவனஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் நாளை (10.9.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன்நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் கீழப்புலியூர்,தென்காசி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் கோட்டம் சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரிவலம்வந்தநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை (10.9.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அன்று கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையன்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம்,லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-14




